Tuesday, June 8, 2010

சட்டம் தன் கடமையை செய்யும் ?{ ஹி ஹி ஹி ]

1984 டிசம்பர் 2 " கருப்பு இரவில் " நடந்தது என்ன ?
நடுநிசியில் வீசிய அந்த நச்சுக்காற்று ,20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை வாரிச்ருட்டி கொண்டுபோய் விட்டது . ஊரெங்கும் மரண ஓலம் .என்ன நடந்தது என்று உணர்வதற்குள் அன்று இரவே 4000 மேற்பட்ட அப்பாவி மக்கள் குவியல் குவியலாக செத்து மடிந்தனர் . போபாலின் யூனியன் கார்பைடு தொழிர்சாலையிலிருந்து வெளியேறிய விஷ வாயு மக்களை மீளா துயரில் ஆழ்த்தியது. 29 ஆண்டுகளுக்கு முன் நடந்த இக் கொடுமைக்கு காரணமானவர்களை நீதிமன்றம் நேற்று தண்டனை விதித்துள்ளது . 2 ஆண்டுகள் சிறை தண்டனை. இதன் முக்கிய குற்றவாளியான வாரன் அண்டர்சன் அமெரிக்காவில் உல்லாசமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறான்.

என்ன நண்பர்களே ! இப்போது தெரிகிறதா ! சட்டம் தன் கடமையை செய்யும் என்று ?{ஹி ஹி ஹி ஹி }


- இனியன்

No comments:

Post a Comment